பிரித்தானிய மக்களை மொத்தமாக கதிகலங்க வைத்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்: நிபுணர்கள் கருத்து
பிரித்தானியாவில் மர்மமான முறையில் மாயமாகி, பொலிசாரையும் பொதுமக்களையும் திணறடித்துவரும் தாயார் விவகாரத்தில் நிபுணர்கள் தரப்பு வெளியிட்டுள்ள கருத்து முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
14 நாட்களுக்கு முன் மாயம்
பிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான 45 வயது நிக்கோலா புல்லி என்பவர் 14 நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாயமானார். கடைசியாக அவர் Wyre ஆற்றங்கரையில் காணப்பட்டதாக தெரியவந்த நிலையில், பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் அந்த ஆற்றில் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
@PA
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் நீச்சல் தொடர்பான நிபுணர் பீற்றர் ஃபால்டிங் தெரிவிக்கையில், நிக்கோலா புல்லி திட்டமிடப்பட்டு கடத்திச் சென்றிருக்கலாம் அல்லது காதலனுடன் தலைமறைவாகியிருக்கலாம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நிக்கோலா புல்லி தமது வளர்ப்பு நாயுடன் நடக்க சென்ற நிலையில், தவறி ஆற்றில் விழுந்திருக்கலாம் என்றே லங்காஷயர் காவல்துறை நம்புகிறது. இந்த நிலையிலேயே முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பீற்றர் ஃபால்டிங் தமது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
உறுதியாக கூறவும் முடியாது
மட்டுமின்றி, நிக்கோலாவின் துணைவரிடமும் தாம் கண்டறிந்த கருத்தை தெரிவித்துள்ளதாகவும் பீற்றர் ஃபால்டிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமது ஊகங்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், நிக்கோலா புல்லி தமது வளர்ப்பு நாயை ஆற்றங்கரையில் வைத்து ஏமாற்றிவிட்டு, கார் ஒன்றில் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் உண்மையில் இவ்வாறு நடந்திருக்கும் என்று உறுதியாக கூறவும் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அனுபவத்தில், இதுவரை மாயமானதாக கூறப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களை ஃபால்டிங் மீட்டுள்ளார். பொலிசார் துப்புத்துலக்க தவறிய வழக்குகளிலும் ஃபால்டிங் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
@PA
2011 நவம்பர் மாதம் 55 வயது பெண்மணி Kate Prout என்பவரின் சடலத்தை ஃபால்டிங் குழுவினர் கண்டுபிடித்தனர். இவர் மாயமாகி 4 ஆண்டுகளுக்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில், அவரது கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மனைவியை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஃபால்டிங் தெரிவிக்கையில், தமது பணியில் இதுவரை எதிர்கொண்ட வழக்குகளில் நிக்கோலா புல்லி விவகாரம் மிகவும் குழப்பமானதாக உள்ளது என்றார்.