பழங்குடியின குழந்தைகளுக்காக 500 மில்லியன் டொலர் நன்கொடை அளித்த அவுஸ்திரேலிய பெண் பில்லியனர்
Nicola Forrest Donates 500 Mnillion Dollars for Women, Children: பழங்குடியின குழந்தைகள் பெண்களுக்காக அவுஸ்திரேலிய பெண் பில்லியனர் ஒருவர் 500 மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளார்.
500 மில்லியன் டொலர் நன்கொடை
அவுஸ்திரேலியாவின் முன்னணி பெண் பில்லியனர்களில் ஒருவரான Nicola Forrest, சமூக நலத்திற்காக தனது புதிய Coaxial Foundation அறக்கட்டளைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்.

இந்த நிதி, குறிப்பாக அவுஸ்திரேலிய பழங்குடியினர் குழந்தைகள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த நன்கொடையில் 125 மில்லியன் டொலர் பணமாகவும், Fortescue நிறுவனத்தின் 25 மில்லியன் பங்குகளும் அடங்குகின்றன.
அறக்கட்டளையின் முதல் 3 முக்கிய திட்டங்கள்
இந்த நிதியின் அடிப்படையில், அறக்கட்டளை தனது முதல் மூன்று முக்கிய நீண்டகால கூட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளது.
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், உலகளாவிய தொடக்கநிலை முதலீட்டு நிறுவனமான Antler உடன் இணைந்து 30 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் சுமார் 250 பெண் நிறுவனர்களுக்கு நிதி, வணிக வழிகாட்டுதல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், “Momentum” என்ற 4 ஆண்டு திட்டம் மூலம் பெண்கள் தங்கள் தொழில்களை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவி வழங்கப்படும். அதேபோல், பழங்குடியினர் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் Cape York Partnership அமைப்புக்கு 6 ஆண்டுகளில் 30 மில்லியன் டொலர் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் கல்வி வாய்ப்புகள் அதிகரித்து, குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அவுஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் Torres Strait Islander குழந்தைகளுக்கான தேசிய அமைப்பான SNAICC-க்கு மூன்று ஆண்டுகளுக்கு 7.1 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படும்.
இந்த நிதி, ஆரம்பக் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும். தனது அறிவிப்பில் Nicola Forrest, திறமையும் ஆர்வமும் கொண்ட பலருக்கு வாய்ப்புகளும் முதலீட்டுத் துணையும் கிடைக்காததே முக்கிய பிரச்சினை என்றும், நீடித்த மாற்றம் ஏற்பட நீண்டகால முதலீடும் வலுவான கூட்டாண்மைகளும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |