'இங்கிலாந்துக்கு செல்ல வேண்டாம்' எச்சரிக்கும் ஸ்காட்டிஷ் முதல் மந்திரி!
ஸ்காட்டிஷ் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இங்கிலாந்துக்கு செல்ல வேண்டாம் என ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் எச்சரித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன், புத்தாண்டு ஈவ் உட்பட அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு ஸ்காட்டிஷ் மக்களை கெண்டுக்கொண்டுள்ளார்.
கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக "எதிர்வரும் காலம் எளிதானதாக இருக்காது" என்று எச்சரித்த நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon), மக்கள் தடுப்பூசி போடவும், Omicron கோவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தவும் தங்களைத் தாங்களே தொடர்ந்து சோதித்துக்கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், "இயல்பை விட இப்போது வீட்டிலேயே இருங்கள் மற்றும் Hogmanay-யில் கூட உங்கள் தொடர்பை முடிந்தவரை குறைக்கவும்," என்று அவர் கூறினார்.
"உட்புற பொது இடங்களுக்குச் சென்றால், உங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக மூன்றுக்கு மேல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் கடைகளில் முகக் கவசங்களை அணியுங்கள்" என்று ஸ்டர்ஜன் எச்சரித்தார்.
மேலும், முகக்கவசத்தை முழுமையாக மூக்கு மற்றும் வாயை மூடியபடி அணியவும் அறிவுருத்தினார்.
Omicron அலை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஸ்டர்ஜன் மேலும் கூறினார்.