கொட்டும் மழையில் எர்லிங் ஹாலண்ட் அணியை சம்பவம் செய்த வீரர்
Aston villa beat manchester city: மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான போட்டியில் ஆஸ்டன் வில்லா அபார வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் போட்டியில் ஆஸ்டன் வில்லா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
6வது நிமிடத்திலேயே
மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆஸ்டன் வில்லா அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி வில்லா பார்க் மைதானத்தில் நடந்தது.

ஆரம்பம் முதலே மழை பொழிந்த நிலையிலும், இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே ஆஸ்டன் வில்லா வீரர் நிக்கோலஸ் ஜேக்ஸன் (Nicolas Jackson) மிரட்டலாக கோல் அடித்தார்.
முதல் பாதிவரை இந்த கோலுக்கு மான்செஸ்டர் சிட்டியால் பதிலடி கொடுக்க முடியவில்லை இரண்டாம் பாதியின் 52வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) கோல் அடித்தார்.

அதிர்ச்சி தோல்வி
ஆனால், அடுத்த 8 நிமிடங்களிலேயே நிக்கோலஸ் ஜேக்ஸன் மீண்டும் ஒரு கோல் அடித்து சிட்டி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இறுதிவரை மான்செஸ்டர் சிட்டியால் ஆஸ்டன் வில்லாவின் தடுப்பு அரணை உடைத்து கோல் அடிக்க முடியவில்லை.
அதனால் ஆஸ்டன் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. போட்டி முழுவதும் மழையிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.
