காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து வலம் வந்த நீடா அம்பானி! என்ன சிறப்புகள் தெரியுமா?
ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து நீடா அம்பானி வந்திருந்தார்.
அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் திருமணத்தின் முந்தய கொண்டாட்டம் தொடங்கியது. இந்த விழாவுக்கு உலக பிரபலங்கள் உள்ளிட்ட 1,000 சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களின் உணவுக்காக இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
நீடா அம்பானியின் புடவை
இந்த திருமண கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை நீடா அம்பானி அணிந்திருந்தார். இந்த புடவையை காஞ்சிபுரம் நெசவாளர்கள் நெய்தனர்.
அவர் அணிந்திருந்த வெள்ளி ஜரிகை பதித்த புடவைக்கான ஜர்தோஷி வேலைப்பாடுகளை செய்தவர் மணீஷ் மல்ஹோத்ரா ஆவார்.
இவர், இந்திய நெசவாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த புடவையை அணிந்துள்ளார். மேலும், இந்த புடவையின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இதனிடையே, கடந்த 2015 -ம் ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்புள்ள புடவையை முன்னாள் எம்பி பரிமல் நத்வானியின் மகன் திருமணத்தில் நீடா அம்பானி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |