முக்கியமான தேர்தல் நேரத்தில் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மாயம்
பிரித்தானியாவில் பிரதமர் பதவியைப் பிடிக்க ஒருபக்கம் ஆளும் கட்சியினர் சிலர் தீவிர நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மறுபக்கமோ, அப்படி பிரதமர் பதவியை பிடிக்க நினைக்கும் ஒருவர் இடைத்தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், அவரை வெற்றி பெற விடாமல் தடுக்க, எதிர்க்கட்சியினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு முக்கியமான நேரத்தில், மக்கள் ஆதரவை பெற்றுவரும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் தலைவரை ஒரு வாரமாகக் காணவில்லை என செய்திகள் வெளியாகிவருகின்றன.
பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மாயம்
ஆம், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான ஆன்டி பர்னாம் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்கமுடியும் என்பதால் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

அவரை எதிர்த்து போட்டியிடுபவர், நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சியைச் சேர்ந்த ராபர்ட் கென்யான்.
விடயம் என்னவென்றால், தன் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்யக்கூட ஃபராஜ் தொகுதிக்கு வரவில்லை. சொல்லப்போனால், ஒரு வாரமாக அவர் வெளியே தலைகாட்டவில்லை.
என்ன பிரச்சினை?
விடயம் என்னவென்றால், ரீஃபார்ம் கட்சித் தலைவரான நைஜல் ஃபராஜ், பொதுத்தேர்தலுக்கு சற்று முன், கிறிஸ்டோபர் ஹார்போன் என்னும் தாய்லாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரரிடமிருந்து 5 மில்லியன் பவுண்டுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
முதலில், அந்தப் பணத்தை தன் பாதுகாப்புக்காக அதாவது செக்யூரிட்டிக்காக பயன்படுத்தியதாக நைஜல் தெரிவித்திருந்தார்.

ஆனால், பின்னர், பிரெக்சிட்டுக்காக பிரச்சாரம் செய்ததற்காக தனக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டது அந்தப் பணம் என்று கூறியிருந்தார் ஃபராஜ்.
இந்நிலையில், ஃபராஜ் அந்த பரிசுப்பணத்தைப் பெற்றுகொண்ட உடன், 4.1 மில்லியன் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதற்காக தனக்கு 1.5 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்பட்டதாகவும், அதைப் பயன்படுத்தி அவர் வீடு வாங்கியதாகவும் விளக்கமளித்திருந்தார் ஃபராஜ்.
ஆக மொத்தத்தில், ஃபராஜ் தாய்லாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரரிடமிருந்து 5 மில்லியன் பவுண்டுகளைப் பெற்றுக்கொண்ட விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்தே ஃபராஜ் மாயமானதாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |