பிரித்தானியாவில் கிளாக்டன் இடைத்தேர்தல்: நைஜல் ஃபராஜ் அமோக வெற்றி
பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத் தேர்தலில் நைஜல் ஃபராஜ்(Nigel Farage) வெற்றி பெற்றுள்ளார்.
நைஜல் ஃபராஜ் வெற்றி
பிரித்தானியாவின் சீர்திருத்தக் கட்சியின்(Reform UK) தலைவர் நைஜல் ஃபராஜ்(Nigel Farage) கிளாக்டன்(Clacton) பகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
நைஜல் ஃபராஜ் பெற்ற நிதி உதவிகள் மற்றும் நன்கொடைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.

இதையடுத்து இப்பகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் போட்டியிட்டார்.
இந்நிலையில் நைஜல் பராஜ் கிட்டத்தட்ட 22,239 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கவுண்ட் பின்ஃபேஸ் 9,455 வாக்குகள் பெற்றுள்ளார்.
நைஜல் பராஜ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அரசியல் நாடகம் என்று குறிப்பிட்டு வெஸ்ட்மின்ஸ்டர் பிரதான கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |