பிரான்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரெஞ்சுக் குடிமகனை கைது செய்துள்ள நைஜர்: அதிகரிக்கும் உரசல்
பிரான்சுக்கும் நைஜர் அரசுக்கும் உரசல் முற்றும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 26ஆம் திகதி, நைஜர் நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoum கைது செய்யப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு திரண்ட ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள்
பிரான்ஸ் ராணுவம் நைஜர் நாட்டில் முகாமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நைஜர் தலைநகர் Niameyக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு, ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில்
நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நைஜருக்கானா பிரான்ஸ் தூதரான Sylvain Itte, நைஜர் தலைநகரில்தான் இருப்பார், வெளியேறமாட்டார் என்று கூறிவிட்டார்.
அதிகரிக்கும் உரசல்
இந்நிலையில், நைஜர் நாட்டில் வாழும் பிரெஞ்சுக் குடிமக்களின் ஆலோசகரான, நைஜர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான Stephane Jullien என்னும் தொழிலதிபரை நைஜர் ராணுவம் கைது செய்துள்ளது.
அவரை உடனடியாக விடுவிக்கவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. மொத்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உரசல் முற்றியுள்ளது எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |