பிரித்தானியாவில் பிச்சை எடுத்து உயிர் வாழும் புலம்பெயர்ந்த பெண்! காரணம் இதுதான்... புகைப்படம்
பிரித்தானியாவில் பிச்சை எடுக்கும் நைஜீரியாவை சேர்ந்த பெண்.
வேலை கிடைக்காததால் பிச்சை எடுப்பதாக வருத்தம்.
நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் பிரித்தானியாவில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Adetemi என்ற பெயருடைய பெண் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் என் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக தான் பிரித்தானியா வந்தேன்.
இங்கு எனக்கு வேலை கிடைக்கவில்லை, அதனால் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் சென்று வாழ்பவர்கள் எல்லோருக்கும் சிறப்பான வாழ்க்கை அமைவதில்லை என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன்.
Source: UGC
எனக்கு யாராவது வேலை கிடைக்க உதவி செய்வார்கள் என நம்புகிறேன். உயிர் வாழ்வதற்காக பிச்சை எடுத்து வருகிறேன், என்னை தாண்டி செல்பவர்கள், துணிகள், சோப்புகள் போன்றவற்றை கொடுக்கிறேன்.
வெளிநாட்டில் படிக்காமல் சென்றாலும் பிரச்சனை தான் என கூறியுள்ளார்.