கனடாவில் வசிக்கும் அழகான கோடீஸ்வர மாப்பிள்ளை என சொக்கி போன 300 இந்திய பெண்கள்! கோடிகளில் மோசடி.. எச்சரிக்கை செய்தி

Police spokesman Wedding
By Raju May 29, 2022 10:00 AM GMT
Report

கனடா வாழ் இந்தியராக தன்னை காட்டி கொண்டு 300 பெண்களை ஏமாற்றிய நைஜீரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர் கரூபா கலுாம்ஜெ (38). இவர், தெற்கு டில்லி கிஷண் கார்க் என்ற இடத்தில் தங்கியிருந்தார். திருமண வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், கனடாவில் குடியேறிய இந்தியர் என தன்னை அறிமுகம் செய்து, திருமணம் செய்து கொள்வதாக பல பெண்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதன்படி தனக்கு நல்ல மணப்பெண் தேடுவதாகக் கூறி பல பெண்களிடம் போலியாக பேசி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இதற்காக ஸ்மார்ட்டாக தெரியும் இந்திய ஆண்களின் பல புகைப்படங்களை ப்ரோபைல் பிக்சராக பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் பலரும் கனடாவில் வசிக்கும் அழகான மற்றும் வசதிபடைத்த நபர் என நம்பி கனவு கண்டு ஏமாந்துள்ளனர். இவர் மீது முதன்முதலாக உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் அழகான கோடீஸ்வர மாப்பிள்ளை என சொக்கி போன 300 இந்திய பெண்கள்! கோடிகளில் மோசடி.. எச்சரிக்கை செய்தி | Nigerian Man Who Duped Over 300 Indian Women

காபி போடுவதற்கு பால் வாங்க கடைக்கு சென்று கோடீஸ்வரனாக திரும்பிய இளைஞன்! நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்

இவரிடம் திருமணம் செய்து கொள்வதாகப் பேசி பழகி எமோஷனல் பிளாக் மெயில் செய்து ரூ.60 லட்சம் வரை சுருட்டியுள்ளார் இந்த நைஜிரிய குடிமகன். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் காவல்துறை, கரூபா தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்து அவர் தங்கி இருந்த தெற்கு டெல்லியில் கிசான் கர் பகுதியில் அவரை கைது செய்தது.

இவரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இவரிடம் இந்தியாவில் தற்போது வசிப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கரூபா, மனித முடி வியாபாரத்துக்காக 'விசா' பெற்று கடந்த 2019ல் டெல்லி வந்தார். பின், மருத்துவ சிகிச்சை எனக்கூறி மார்ச் மாதம் மீண்டும் வந்துள்ளார்.

அதன்பின், டில்லியிலேயே இடம் மாறி தங்கி மோசடி செய்துள்ளார். அவரிடம் இருந்து, ஏழு பாஸ்போர்ட்கள், மொபைல் போன்கள், ஏ.டி.எம்., கார்டுகள், 'இன்டர்போல்' மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியவை பெயரில் போலி கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கரூபாவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் வசிக்கும் அழகான கோடீஸ்வர மாப்பிள்ளை என சொக்கி போன 300 இந்திய பெண்கள்! கோடிகளில் மோசடி.. எச்சரிக்கை செய்தி | Nigerian Man Who Duped Over 300 Indian Women

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US