இரவு உணவுக்குப் பின் இதை செய்யவே செய்யாதீங்க! அப்பறம் சிக்கல் தான்
பழக்கவழக்கம் என்ற பெயரில் சில தவறான விடயங்களை தொடர்ந்து செய்வோம். இதுவே பின்னாளில் ஆபத்தாய் முடிந்துவிடும்.
அப்படி இரவு உணவுக்குப் பின் நாம் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட சில பழக்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
நடைப்பயிற்சி செய்வது
இரவு சாப்பிட்ட உடன் நடக்கும் போது கைகளுக்கும், கால்களுக்கும் இரத்தம் வேகமாகப் பாய்வதால் செரிமானம் தாமதமாகவே நடைபெறுகிறது. மேலும், சாப்பிட்ட பின் நடப்பதால் சிலருக்கு வயிற்று வலியோ, தலைச்சுற்றலோ ஏற்படும்.
அதிக தண்ணீர்
இரவு உணவுக்குப் பின் அதிகமாக நீர் குடித்தால், செரிமானம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
பல் துலக்குதல்
இரவு உணவுக்குப் பின் உடனடியாக பல் துலக்குவது நல்லதல்ல. உணவுகளை மென்று சாப்பிடுவதற்காக, பற்களுக்கு நிறைய வேலைகள் கொடுப்பதால், அது மீண்டும் வலுப்பெற சிறிது நேரமாகும்.
குளிப்பது
இதுவும் நடைப்பயிற்சி போலத்தான். இரவு உணவுக்குப் பின் கை, கால்களிலேயே இரத்தம் பாய்வதால், வயிற்றுக்குப் போக வேண்டிய இரத்தம் குறைந்து விடுகிறது. இதனால் செரிமானம் பாதிக்கப்படுகிறது.
உடற்பயிற்சி
இரவு சாப்பிட்டதும் உடற்பயிற்சி செய்வது கண்டிப்பாக நல்லதல்ல. இதனாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சரியாகச் செரிமானம் ஆகாமலும் போய்விடும்.
shutterstock