விவாகரத்து பெற்ற தெலுங்கு நடிகை; காரணம் இது தானா?
தெலுங்கில் பல படங்கிளில் நடித்து வந்த நடிகை நிஹாரிகா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை நிஹாரிகா
நிஹாரிகா கோனிடேலா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர்.
இவர் தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நாகேந்திர பாபுவின் மகள் ஆவார்.
மேலும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சைதன்யா என்பவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
நிஹாரிகாவின் திருமண வாழ்க்கை,
கடந்த ஒரு சில மாதங்களாக சைதன்யாவுக்கும் நடிகை நிஹாரிகாவும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆகவே இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் தெரியவந்தது.
ஆனால் சட்டரீதியாக இருவருமே பிரயவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் தற்போது இருவருமே சட்ட ரீதியாக பிரிந்துவிட்டதாக தனது சமூக ஊடகங்களில் நடிகை நிஹாரிகா வெளியிட்டுள்ளார்.
மேலும் விவாகரத்து பெற்றுவிட்டதால், திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கவிட்டதாகவும், நானும் சைதன்யாவும் பிரிய முடிவெடுத்துள்ளோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்க எங்களுக்கு தேவையான ப்ரைவசியை கொடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபல்யமான இந்த குடும்பத்தில் ஏற்பட்ட இந்த விவாகரத்து பிரச்சினையானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |