வாடகைக்கு குடியிருப்பதை ஊக்குவிக்கும் பிரபல கோடீஸ்வரர்... புதிதாக வாங்கிய வீடு: சொன்ன காரணம்
சொந்தமாக வீடு வாங்குவதற்கு பதிலாக வாடகைக்கு குடியிருப்பதை ஊக்குவிக்கும் Zerodha இணை நிறுவனர் Nikhil Kamath தற்போது சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்
கோடீஸ்வரர் நிகில் காமத்தின் இந்த அதிரடி முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சொந்தமாக வீடு வாங்குவதை கடுமையாக எதிர்த்து வந்த காமத், வாடகைக்கு குடியிருப்பதன் நன்மைகளையும் பட்டியலிட்டு வந்துள்ளார்.
அவரது போட்காஸ்டின் சமீபத்திய அத்தியாயம் ஒன்றில் தனது இந்த அணுகுமுறையின் குறிப்பிடத்தக்க குறைபாட்டை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
வாடகைக்கு குடியிருப்பதன் அனைத்து நன்மைகளிலும், ஒரு பாதகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள காமத், நாம் எப்போது வாடகை வீட்டில் இருந்து வெளியேறலாம் என்பது பற்றிய தொலைநோக்கு பார்வை நமக்கு இருப்பதில்லை என்றார்.
கோடீஸ்வரர்கள் வரிசையில்
அதனாலையே, தமது நீண்டகால முடிவை மாற்றிக்கொண்டு புதிய குடியிருப்பு ஒன்றை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தற்போதுள்ள பெரும் கோடீஸ்வரர்களில் நிகில் காமத்தும் ஒருவர்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 26,061 கோடி. உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 1,135வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |