அரசியல் கட்சி தலைவரை திருமணம் செய்து ஏமாற்றிய நிகிதா - அஜித்குமார் வழக்கில் பரபரப்பு
அஜித்குமார் உயிரிழப்பு வழக்கில் புகாரளித்த நிகிதாவின் மோசடி பின்னணி வெளிவந்துள்ளது.
அஜித் குமார் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதோடு, மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) சண்முகசுந்தரம் பனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகை திருடு போனதாக புகார் அளித்த நிகிதா என்பவரின் பின்னணி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிகிதாவின் மோசடி பின்னணி
இவர் ஏற்கனவே சிலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. பண மோசடி மட்டுமின்றி, அவர் திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவரான திருமாறன் ஜி என்பவரை, நான்கவதாக திருமணம் செய்து, திருமண நாள் அன்றே ஓடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய திருமாறன் ஜி, "நிகிதா குடும்பத்தை எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார்.
எனக்கு முன்னால் 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடி விடுவார். அதன் பின்னர், திருமணம் செய்த குடும்பத்தினர் மீது வரதட்சிணை புகார் அளித்து, மிரட்டி பணம் பறிப்பார்கள். என்னிடமும் அவர் தந்தை 10 லட்சம் வாங்கிக்கொண்டுதான் விவாகரத்து அளித்தனர்.
அவரின் தந்தை உதவி ஆட்சியர், தாய் அரசு ஊழியர். 20 ஆண்டுகளுக்கு முன்பே, அவருக்கு காவல்துறை உயரதிகாரிகள், மோசடியில் ஈடுபட உதவி செய்தனர். அதே போல் தற்போதும் உதவியுள்ளனர்.
நகை திருடுபோக வாய்ப்பில்லை. அது பொய்யான குற்றச்சாட்டுதான். கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தன்னுடைய ஆளுமையை காட்ட வேண்டுமென்று எண்ணித்தான் புகார் கொடுத்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |