நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறாரா? வைரலாகும் பதிவு
யாகாவராயினும் நாகாக்க படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமாகிய நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறார் என இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நிக்கி கல்ராணி - ஆதி
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் அதிகமாக விரும்பப்படும்.
அவ்வாறு திருமணம் செய்துக்கொண்ட அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.
அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் விதமாக நிக்கி கல்ராணி மற்றும் ஆதி திருமணம் செய்தார்கள்.
தமிழில் யாகாவராயினும் நாகாக்க படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமாகிய நடிகை நிக்கி கல்ராணி அதே படத்தில் நடித்த ஆதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்கள் இருவரும் கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டு உறவினர்கள் மத்தியில் திருமணமும் செய்துக்கொண்டனர்.
இந்நிலையில் நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கும் மாதிரியான புகைப்படத்தை அவர்கள் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
கர்ப்பமாக இருக்கும் நிக்கி கல்ராணி
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து உண்மையான தகவலை ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |