காதலிக்கு முதல் முத்தம் கொடுத்தபோது கழுத்தை நெறித்த 12 வயது சிறுவன்: அதிரவைக்கும் தகவல்கள்
12 வயதுள்ள தன் ஆண் நண்பன், தனக்கு முதல் முத்தத்தைக் கொடுக்கும்போது, தனது கழுத்தை நெறித்ததாகக் கூறியுள்ளார் ஒரு சிறுபெண்.
அதிரவைக்கும் தகவல்கள்
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்தில் ஒரு சிறுபிள்ளை, தனக்கு ஒன்பது வயதே இருக்கும்போது முதல் ஆபாசப்படத்தைப் பார்ப்பதாக அதிரவைக்கும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்துக்கான சிறுவர் ஆணையர்.
இங்கிலாந்துக்கான சிறுவர் ஆணையரான Dame Rachel de Souza, ஆபாசப்படங்கள் பார்க்கும் பழக்கம் சிறுபிள்ளைகளிடையே பரவலாகக் காணப்படுவதாகவும், அவற்றில் காணப்படும் விடயங்கள் உண்மை என அவர்கள் நம்பி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பாலுறவின்போது உடல் ரீதியான வன்முறையை பெண்கள் விரும்புகிறார்கள் என்னும் ஒரு எண்ண, பல இளைஞர்களிடம் காணப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.
காதலிக்கு முதல் முத்தம் கொடுத்தபோது கழுத்தை நெறித்த 12 வயது சிறுவன்
தன்னிடம் பேசிய ஒரு சிறுபெண், தன் ஆண் நண்பன் தனக்கு முதல் முத்தத்தைக் கொடுக்கும்போது, தனது கழுத்தை நெறித்ததாகவும், ஆபாசப்படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறுவதால், அது சாதாரணமான ஒரு விடயம்தான் என நம்பி அவன் அப்படிச் செய்ததாகவும் கூறியதாக தெரிவிக்கிறார் Dame.
ஆகவே, பிள்ளைகளுடைய கண்ணோட்டத்தை பெற்றோரும் அரசியல்வாதிகளும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் Dame.
இந்நிலையில், சிறுபிள்ளைகள் இணையத்தில் ஆபாசப்படங்களைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்தும் ஒன்லைன் பாதுகாப்பு மசோதா ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.