வலதுசாரிகளால் பற்றியெரியும் பிரித்தானிய நகரங்கள்: 9 பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரித்தானியாவில் சிறுவன் ஒருவனின் கொடுஞ்செயலால் தற்போது நாடு முழுவதும் பல நகரங்கள் வலதுசாரிகளால் பற்றியெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் கவனித்து வருகிறது
கலவரக்காரர்களை எச்சரித்துள்ள உள்விவகார அமைச்சர், அனைவரையும் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தீவிர வலதுசாரி அமைப்புகள் நாடு முழுவதும் குறைந்தது ஒன்பது நகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், யார் இந்த ஆர்ப்பாட்டங்கள் அல்லது பேரணியை ஒருங்கிணைத்தாலும், பங்கேற்பவர்கள் அனைவரையும் அரசாங்கம் கவனித்து வருவதாக Lord Howson எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நீங்கள் இப்போது இதை ஏற்பாடு செய்வதைத் தடுக்கவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் எங்களுக்கு அதிகாரம் உள்ளது.
இதனால் இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் டெலிகிராம் செயலியில் அமைந்துள்ள குழு ஒன்றில்,
தேசபக்தர்களே பொறுத்தது போதும் இது நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் என குறிப்பிட்டு 9 நகரங்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளில் வார இறுதி நாட்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
9 நகரங்களுக்கு எச்சரிக்கை
மான்செஸ்டர், லிவர்பூல், நாட்டிங்ஹாம், லீட்ஸ், நியூகேஸில், மிடில்ஸ்பரோ, பெல்ஃபாஸ்ட், பிரிஸ்டல், ஹல் ஆகிய 9 நகரங்களை தீவிர வலதுசாரிகள் அமைப்பினர் பட்டியலிட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 29ம் திகதி Southport பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாம் ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலை அடுத்தே தீவிர வலதுசாரிகள் அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
Southport வழக்கில் கைதாகியுள்ள Axel Rudakubana என்பவருக்கு அடுத்த வாரம் 18 வயதாகிறது. இதனையடுத்தே, Southport சம்பவத்தில் தொடர்புடைய நபரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்த வழக்கு 2025 ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றே நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |