பிரான்ஸ் உயிரியல் பூங்காவில் ஆபத்தான மிருகங்கள் தப்பியோட்டம்!
பிரான்ஸ் உயிரியல் பூங்காவிலிருந்து 9 ஓநாய்கள் தப்பியோடியதை அடுத்து, அதிகாரிகள் குறித்த பூங்காவை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
தெற்கு பிரான்சில் உள்ள Montredon-Labessonnie-ல் உள்ள Trois Vallées உயிரியல் பூங்காவிலிருந்தே ஓநாய்கள் தப்பியோடியுள்ளன.
பார்வையாளர்கள் நேரத்தின் போது, ஓநாய்கள் பாதுகாப்பு அரண்களை சேதப்படுத்ததி தடுப்பு வேலியை தாண்டி குதித்து தப்பியுள்ளன.ஆனால், அவை பூங்காவை விட்டு வெளியே செல்லவில்லை.
இந்நிலையில், தப்பியோடிய 9 ஓநாய்களில் ஆக்ரோஷமாக நடந்த நான்F சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீதமிருந்த 5 ஓநாய்கள் மயக்க மருத்து செலுத்தி, அடைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது உயிரியல் பூங்காவில் அதிகபடியான கூட்டம் இல்லை மற்றும் அங்கிருந்த மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு குறைப்பாடுகள் சரிசெய்யப்படும் வரை உயிரியல் பூங்கா மூடப்படும் என உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.