இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல்; தொடர்ந்து 7 ஆண்டுகளாக சென்னை IIT முதலிடம்
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
NIRF 2025
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஓவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான NIRF(National Institutional Ranking Framework) பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், தொடர்ந்து 7வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் வகித்து வருகிறது. இதில் முதல் 6 இடங்களை ஐஐடிகள் பிடித்துள்ளது.
சிறந்த கல்லூரி பட்டியலில், டெல்லியின் ஹிந்து கல்லூரி முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 9வது இடத்திலும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10வது இடத்திலும் உள்ளது.
மருத்துவ கல்லூரிகளின் பிரிவில், டெல்லி எய்ம்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3வது இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த பல்கலைக்கழகங்களின் பிரிவில், பெங்களூரு IISC முதலிடமும், டெல்லி எய்ம்ஸ் 2வது இடமும், மணிப்பால் உயர் கல்வி அகாடமி 3வது இடமும் பிடித்துள்ளது.
இதில், தமிழ்நாட்டை சேர்ந்த கோயம்புத்தூர் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |