இவர்களுக்காக தான் எல்லாம் செய்தேன்.. ஆனால், அவர்களே! நிர்மலா தேவி கிளப்பும் புதிய சர்ச்சை

Tamil nadu
By Sathya May 09, 2024 06:20 AM GMT
Report

மாணவிகளை தவறான வழிநடத்த முயற்சி செய்தது இவர்களுக்காக தான் என்று பேராசிரியை நிர்மலா தேவி புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சிறை தண்டனை

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

nirmala devi

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஏப்.26 -ம் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர், நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிர்மலா தேவி ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29 -ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

பின்னர், ஏப்ரல் 29 -ம் திகதி பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்போது, நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்றும், தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க தண்டனையை நாளைக்கு (ஏப்.30) ஒத்திவைக்க வேண்டும்" என வாதிட்டார்.

வெயிலில் இருந்து தப்பிக்க பாக்கெட்டுகளில் வெங்காயத்தை வையுங்கள்! பாஜக அமைச்சரின் டிப்ஸ்

வெயிலில் இருந்து தப்பிக்க பாக்கெட்டுகளில் வெங்காயத்தை வையுங்கள்! பாஜக அமைச்சரின் டிப்ஸ்

அதன்படி ஏப்.30 -ம் திகதி தண்டனை விவரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் அறிவித்தார். அவர், நிர்மலா தேவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சிறை தண்டனை பிறப்பித்து மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

புகார் மனு

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர், "இந்த வழக்கில் எனக்கு கிடைத்துள்ள 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். நான் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்படுவேன்.

nirmala devi

இந்த வழக்கில் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்களுக்காக தான் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சி செய்தேன். இதனால் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

குற்றவாளிகளை விடுதலை செய்து என்னை தண்டித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் சிபிசிஐடி பொலிஸார் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7 -ம் திகதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US