நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவை.., அதன் விலை எவ்வளவு?
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று காலை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அந்தவகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 2027க்கான நிதி நிலை அறிக்கையை இன்று காலை தாக்கல் செய்தார்.
பொதுவாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தினத்தில் அணியும் புடவைகள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பேசும் பொருளாக மாறிவிட்டன.
நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு முறையும் தனது பட்ஜெட்டை உரையை வழங்கும்போது வெவ்வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவமான புடவைகளைத் தேர்ந்தெடுப்பார்.
இந்த புடவைகள் வெறும் துணிகள் மட்டுமல்ல, கலாச்சாரம், கைவினைஞர்கள் மற்றும் பிராந்திய அடையாளத்தையும் மதிக்கின்றன.
இந்நிலையில் இன்று, நிர்மலா சீதாராமன் அடர் இளஞ்சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்திருந்தார்.
ஊதா நிற கட்டம் போட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், மங்கலான பொன் பழுப்பு நிற பார்டர் கொண்ட சேலையில் காணப்பட்டார்.
காஞ்சிபுரம் நகரத்தில் உருவாகும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய நெசவு கலைக்குச் சிறந்த உதாரணமாகும்.

மல்பெரி பட்டு நூலால் தயாரிக்கப்படும் இந்த சேலைகள், கனமான துணி அமைப்பும் நுணுக்கமான ஜரி வேலைப்பாடுகளும் கொண்டவை.
தங்கம் அல்லது வெள்ளி நூல்களை பயன்படுத்தி கோயில் வடிவங்கள், மயில், மலர்கள் போன்ற அழகிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன.
சேலைகளின் விலை பயன்படுத்தப்படும் பட்டு தரம் மற்றும் கைவினை நுட்பத்தைப் பொறுத்து மாறுபடும்.
சாதாரண கைநெசவு காஞ்சிபுரம் சேலைகள் சுமார் ₹2,250 முதல் ₹12,000 வரை கிடைக்கும்.
உயர்தர தூய பட்டு மற்றும் மிகச் சிறப்பான வடிவமைப்புகளுடன் கூடிய சேலைகள் ₹80,000 முதல் ₹5,00,000 அதிகமாக விலை பெறக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |