8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: நேரலை வீடியோ
நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
Budget 2025
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 8 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது, அவருக்கு இனிப்பு வழங்கி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், நாடாளுமன்றம் சென்ற நிதியமைச்சர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 8-வது முறையாக 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |