யாஷிகாவுடன் பிரேக் அப் ஆனது ஏன்? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு சொன்ன நிரூப்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப், காதலியாக இருந்த யாஷிகாவை பிரிந்தது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப், போட்டியின் இறுதி நாள் வரை சென்றார். இருப்பினும் அவரால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, நிரூப், நடிகை யாஷிகாவின் காதலன், அவர் மூலம் தான் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் என்று கூறப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் கூட, நிரூப்பை பார்ப்பதற்காக யாஷிகா ஆனந்த் சென்றிருந்தார்.
இதனால் இருவரும் காதலிக்கின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிரூப், இது குறித்து கூறுகையில், யாஷிகாவை காதலித்தது உண்மை தான், நாங்கள் இருவரும் ஒன்றாக காதலித்தோம்.
ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்குமே இது செட் ஆகாது என்பதை புரிந்து கொண்டு பிரிந்துவிட்டோம். பிரிந்தாலும், இப்போது நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.
நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வர யாஷிகா தான் முக்கிய காரணம், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் என்று கூறியுள்ளார்.