வரலாறு படைத்த முதல் இலங்கை வீரர்! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய நிசங்காவின் சாதனை
ஆசியக் கிண்ணத்தில் சதம் விளாசியதன் இலங்கையின் பதும் நிசங்கா புதிய சாதனை படைத்தார்.
பதும் நிசங்கா
துபாயில் நேற்று நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
போட்டி டை ஆனதைத் தொடர்ந்து, இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இலங்கை தொடக்க வீரர் பதும் நிசங்கா (Pathum Nissanka) 58 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் டி20 ஆசியக் கிண்ணத்தில் சதம் அடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு விராட் கோஹ்லி, பாபர் ஹயாத் மட்டுமே சதம் அடித்திருந்தனர்.
மேலும், டி20 ஆசியக் கிண்ணத்தில் சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் எனும் வரலாறு படைத்தார் பதும் நிசங்கா (Pathum Nissanka).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |