Golden Duck அவுட் ஆன இலங்கை வீரர்! ஜாம்பவானுடன் மோசமான சாதனை
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்கா, இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி பதும் நிசங்கா (Pathum Nissanka) மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முகமது சிராஜ் (Mohammed Siraj) முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து நிசங்கா ஆட்டமிழந்தார்.
முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனதால் நிசங்கா மோசமான சாதனை ஒன்றை படைத்தார்.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியா (2002), உபுல் தரங்கா (2009 & 2010) இருவரும் முதல் பந்தில் ஆட்டமிழந்திருந்தனர்.
அவர்களின் வரிசையில் ஒருநாள் போட்டியில் 14 ஆண்டுகளில், முதல் பந்தில் இந்திய அணிக்கு எதிராக அவுட் ஆன வீரராக நிசங்கா மாறியுள்ளார்.
Golden duck for in-form Pathum Nissanka ?
— Sportskeeda (@Sportskeeda) August 4, 2024
Mohammed Siraj strikes with his very first ball ?
?? - 0/1 (0.1)#MohammedSiraj #SLvIND #Colombo #Sportskeeda pic.twitter.com/NZ4n60VpaK
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |