அவுஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த இலங்கை வீரர்கள்!
உலகக்கோப்பை தொடரில் இலங்கையின் குசால் பெரேரா மற்றும் நிசங்கா இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் விளாசினர்.
லக்னோவில் நடந்து வரும் உலகக்கோப்பை ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் துடுப்பாடி வருகிறது.
தொடக்க வீரர்களான பதும் நிசங்கா - குசால் பெரேரா அவுஸ்திரேலிய பந்துவீச்சினை விளாசி தள்ளினர்.
What a brilliant innings by Kusal Janith Perera! ? Scored 78 off 82 balls!#CWC23 #LankanLions #SLvAUS pic.twitter.com/YPQ7npEY6Y
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 16, 2023
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசங்கா தனது 11வது அரைசதத்தினை பதிவு செய்தார்.
பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறிய இலங்கை வீரர்..ஜென்டில்மேனாக நடந்துகொண்ட ஸ்டார்க்..பாராட்டும் ரசிகர்கள்
அதேபோல் குசால் பெரேராவும் அரைசதம் அடித்தார். இது அவருக்கு 16வது அரைசதம் ஆகும். ஆனால், அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இருவரையுமே வெளியேற்றினார். நிசங்கா 61 (67) ஓட்டங்களும், குசால் பெரேரா 78 (82) ஓட்டங்களும் எடுத்தனர்.
Pathum Nissanka falls after an excellent innings ?#LankanLions #CWC23 #SLvAUS pic.twitter.com/bo99FbprMS
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 16, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |