இந்திய பந்துவீச்சாளரின் செயலுக்கு பதிலடியாக நிசங்கா அடித்த சிக்ஸ்! மிரண்ட சூர்யகுமார்..வைரல் வீடியோ
இந்திய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் ஓவரில் இலங்கையின் நிசங்கா அடித்த சிக்ஸர் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹர்ஷித், நிசங்கா
ஆசியக் கிண்ணத்தில் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
Quota Harshit Rana action and reaction 😹😹
— Prakash (@definitelynot05) September 27, 2025
SKY reaction 😭pic.twitter.com/oWeLqJVOKt
இப்போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின்போது 5வது ஓவரை ஹர்ஷித் ராணா (Harshit Rana) வீசினார்.
அந்த ஓவரில் நிசங்கா அடித்த பந்தைப் பிடித்த ராணா, கோபமாக அவரை நோக்கியே த்ரோ செய்தார்.
அந்த பந்து விக்கெட் கீப்பரிடம் நேரடியாக சென்றது. அதனைத் தொடர்ந்து, ராணா வீசிய அடுத்த பந்தை நிசங்கா சிக்ஸராக பறக்கவிட்டு பதிலடி கொடுத்தார்.
அப்போது சூர்யகுமார் யாதவ் மிரண்டுபோய் திரும்பிப் பார்த்தார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |