60 வயதிலும் இளமையாக இருக்கும் நீடா அம்பானி: அவர் அழகின் ரகிசியம் என்ன?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்சு இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீடா அம்பானி.
நீடா அம்பானிக்கு 60 வயது ஆகிய நிலையில் இன்றளவில் சருமம் சுருக்கமின்றி இன்னும் இளமையாக உள்ளார்.
என்றும் இளமையாக இருக்கும் நீடா அம்பானியின் அழகின் ரகசியம் குறித்து பார்க்கலாம்.
நீடா அம்பானியின் அழகின் ரகசியம்
நீடா அம்பானி தினமும் தனது சருமத்திற்கு 2 முறை கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் ஆகிய மூன்று விஷயங்களை தவறாமல் மேற்கொள்வாராம்.
மேலும் இவர் தனது சரும வகைக்கு ஏற்ற நல்ல தரமான சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவாராம்.
கூடுதலாக, இவர் சீரான இடைவெளியில் சருமத்திற்கு ஸ்க்ரப் மற்றும் வாரம் ஒருமுறை ஃபேஷியல் ஆகியவற்றை தவறாமல் செய்வாராம்.
உடல் மட்டுமின்றி, சருமமும் ஆரோக்கியமாக இருக்க இவர் தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பாராம்.
அதோடு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்வாராம்.
நீடா அம்பானி பொலிவான சருமத்தைப் பெற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உண்பாராம்.
இவர் தனது மன அழுத்தத்தைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் தினமும் தியானம் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் பிற வழிகளை தவறாமல் மேற்கொள்வாராம்.
மேலும், போதுமான அளவு ஓய்வை தவறாமல் தினமும் உடலுக்கு கொடுப்பாராம்.
நீடா அம்பானி சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க தவறாமல் சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துவாராம்.
இதுதவிர, சரும நிறத்தை தக்க வைப்பதற்கும் ஃபேஷியல், மசாஜ் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்றவற்றிலும் ஈடுபடுவாராம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |