நீதா அம்பானியின் கனவு திட்டம்! 2000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவ நகரம்: முழுவிவரம்!
மும்பை நகரில் மிகப்பெரிய மருத்துவ நகரை உருவாக்க இருப்பதாக ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் நீதா அம்பானி அறிவித்துள்ளார்.
புதிய மருத்துவ நகரம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 48 வது பொதுக்குழு கூட்டத்தில் மும்பை நகரின் மையப்பகுதியில் புதிய மருத்துவ நகரை அமைக்கும் புதிய திட்டத்தை நீதா அம்பானி அறிவித்துள்ளார்.
In the heart of #Mumbai, a 2,000-bed #medical city is being set up, which will not be just another hospital, but will have #AI-powered diagnostics and cutting-edge medical technology, disclosed #NitaAmbani, Founder and chairperson of the #Reliance Foundation. pic.twitter.com/WwW1F0S28Q
— Deccan Herald (@DeccanHerald) August 30, 2025
இந்த புதிய மருத்துவ நகரில், செயற்கை நுண்ணறிவு மூலம் நோய்களை கண்டறிதல் மற்றும் பிற அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய 2000 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிகள் உருவாக்கப்படும் என நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
“உயிருக்கு மரியாதை” (Respect for life) என்ற அடிப்படை கொள்கையின் கீழ் இந்த திட்டமானது உருவாக்கப்படுவதாக அம்பானி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் எதிர்கால மருத்துவர்களை பயிற்றுவிக்க புதிய மருத்துவ நகரில் மருத்துவ கல்லூரியும், இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதையும் உறுதி செய்வதை ரிலையன்ஸ் நோக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் “ஜீவன்” பிரிவு
இந்த அறிவிப்பின் போது, சர் ஹெச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 3.3 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்று இருப்பதாகவும் நிதா அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
இதன் வெற்றியின் காரணமாக மருத்துவமனையில் “ஜீவன்” பிரிவு தொடங்கப்பட இருப்பதாகவும், இதில், புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யுனோதெரபி குறிப்பாக குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை ஆகியவை வழங்கப்படும்.
பெரிய கடற்கரை சாலை தோட்டம்
பெரிய மருத்துவ நகருடன் சேர்த்து, 130 ஏக்கர் பரப்பளவில் பெரிய கடற்கரை சாலை தோட்டத்தையும் ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது. மும்பை மக்களை இயற்கையுடன் இணைக்கும் இவை பசுமை நுரையீரல் என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |