நிச்சயதார்த்த மோதிரத்துடன் வந்த அம்பானி வீட்டு நாய்! குத்தாட்டம் போட்ட நீட்டா அம்பானி: அழகிய வீடியோ
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை அம்பானி வீட்டு செல்ல நாய் கொண்டு வந்த கொடுத்த சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா நிச்சயதார்த்தம்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும், திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் `ஆன்டிலியா' பங்களாவில், ஜனவரி 19 வியாழக்கிழமை மாலை நடந்தது.
இந்த விழாவில் நிச்சயதார்த்த மோதிரத்தை கொண்டு வந்து கொடுத்த அம்பானி வீட்டு செல்ல நாய் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தது. இதற்கு அடுத்த சர்ப்பரைஸ் என்றால் ஆனந்தின் தாயார் நீட்டா அம்பானி செய்த விடயம் தான்..!
நீட்டா அம்பானி நடனம்
அதன்படி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் மோதிரம் மாற்றி கொண்ட போது நீட்டா தலைமையில் குடும்பத்தார் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார்கள்.
இதை பார்த்த விருந்தினர்கள் மகிழ்ச்சியில் வாயடைத்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.