நீடா அம்பானிக்கு விருது வழங்கி கௌரவிப்பு: எதற்காக?
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானிக்கு சிறந்த பெண் விளையாட்டுத் தலைவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற CII Scorecard 2023 நிகழ்ச்சிலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விளையாட்டுகளை முன்னெடுத்து செல்வதில் நீடா அம்பானி முன்மாதிரியாக திகழ்வதாகவும், இதை பாராட்டும் விதமாக இந்தாண்டுக்கான சிறந்த பெண் விளையாட்டு தலைவருக்கான விருது வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய நீடா அம்பானி, சிறந்த பெண் விளையாட்டு தலைவர் மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் நிறுவனம் என்ற இரண்டு விருதுகளை ஏற்றுக்கொள்வதில் பெருமையடைகிறேன்.
2023ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டு திறமைக்கான ஆண்டாக இருக்கிறது, நம் வீரர்கள் பல விருதுகளை வென்று உலகளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வு மும்பையில் நடைபெறவிருப்பதாகவும், உலகளவில் இந்தியாவை விளையாட்டு சக்தியாக மாற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.