மருமகளுக்கு ரூ.451 கோடி மதிப்பில் வைர நெக்லஸை வழங்கிய நீடா அம்பானி
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தனது மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளார்.
வைர நெக்லஸ்
அம்பானி குடும்பத்தின் மருமகள்களில் ஒருவரான ஷ்லோகா மேத்தா கடந்த 2019-ம் ஆண்டில் ஆகாஷ் அம்பானியை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் பிரமாண்டமான திருமணத்தின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஷ்லோகா மேத்தா. அப்போது திருமண பரிசாக அவரது மாமியார் நீடா அம்பானி வழங்கிய ஆடம்பரமான திருமண பரிசு பெரிதளவில் பேசப்பட்டது.
செல்வத்திற்கும் ஆடம்பரத்திற்கும் பெயர் பெற்ற அம்பானி குடும்பம், ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தா மற்றும் அனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு விலையுயர்ந்த பரிசை வழங்குவதில் ஆச்சரியமில்லை.
ஸ்லோகா மேத்தா மற்றும் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தில், நீடா அம்பானி தனது மருமகளுக்கு விலையுயர்ந்த மௌவாட் எல்'இன்கம்பரபிள் நெக்லஸை (Mouawad L'Incomparable necklace) பரிசாக வழங்கினார்.
இந்த நெக்லஸில் 229.52 காரட் வெள்ளை வைரங்களும், 407.48 காரட் மஞ்சள் வைரங்களும், 18 காரட் ரோஸ் கோல்ட் கிளை சங்கிலியில் தொங்கவிடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.451 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |