லண்டனில் பல லட்சம் மதிப்பிலான உடையை வாங்கி அணிந்த முகேஷ் அம்பானி மனைவி! புகைப்படம்
நீட்டா அம்பானி லண்டன் பயணத்தின் போது குளிரில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அணிந்த உடைகளின் விலை குறித்த வாய்பிளக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நீட்டா அம்பானி
உலக கோடீஸ்வரர்களின் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் மனைவி நீட்டா அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் நிறுவனராக நீட்டா உள்ளார்.
காண்போரை அசரடிக்கும் வகையிலான அழகிய மற்றும் விலையுயர்ந்த உடைகளை அணிவதை நீட்டா வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அம்பானி சமூகவலைதள ரசிகர் பக்கத்தில் நீட்டா லண்டன் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
bollywoodshaadis
லண்டனில்...
அதில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ஸ்டைலான உடையை அணிந்திருந்தார். அதன் விலை ரூ. 84,603 என தெரியவந்துள்ளது.
அந்த உடைக்கு மேல் குளிரில் இருந்து தப்ப சாம்பல் நிற ஃபர் கோட்டுடன் நீட்டா இருக்கும் புகைப்படம் வெளியானது.
சின்சில்லா ஃபர் கோட்டின் விலை ரூ. 20,70,000 என தெரியவந்திருக்கிறது.