நீடா அம்பானியின் Makeup Artist.., ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?
பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் Makeup Artist யார் என்பதையும், அவர் வாங்கும் சம்பளம் குறித்தும் பார்க்கலாம்.
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் நடைபெற்ற திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்தில் உலக பிரபலங்கள் உள்ளிட்ட 1,000 சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, நீடா அம்பானி அணிந்திருந்த உடைகள், நகைகள் மற்றும் அவரது மேக்கப் என அனைத்தும் தனி கவனத்தை பெற்றது.
யார் அவர்?
திருமண விழா மற்றும் பார்ட்டி என அனைத்து நிகழ்வுகளிலும் நீதா அம்பானியை அழகாக காட்டுவது பிரபல மேக்கப் கலைஞர் மிக்கி காண்டிராக்டர் (Mickey Contractor) தான்.
இந்தியாவின் திறமையான ஒப்பனை கலைஞராக அறியப்படும் இவர் பல பிரபலங்களுக்கும் ஒப்பனை செய்கிறார். குறிப்பாக Mickey ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே லட்சங்களில் சம்பளம் பெறுகிறார்.
இவர், 30 ஆண்டுகளாக பொழுதுபோக்கு மற்றும் பேஷன் துறையில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார். அந்தவகையில், நீடா அம்பானியும் இவரது வாடிக்கையாளர் பட்டியலில் உள்ளார்.
நீடா அம்பானி கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் மிக்கி தான் மேக்கப் போடுகிறார். இவர், ஒருவருக்கு மேக்கப் செய்ய ஒரு நாளைக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெருகிறாராம்.
அதாவது இவர் வாங்கும் சம்பளமானது இந்தியாவில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |