நீதா அம்பானி கொண்டாடிய இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான பிறந்தநாள் விழா: வாயைப்பிளக்க வைக்கும் செலவு
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் 60வது பிறந்தநாளை அவரின் குடும்பத்தினர் ஒரு திருவிழா போன்றே கொண்டாடியுள்ளனர்.
நீதா அம்பானி 60வது பிறந்தநாள்
கடந்த நவம்பர் 1ம் திகதி சுமார் 250 சிறப்பு விருந்தினர்களுடன் நீதா அம்பானி தனது 60வது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடியுள்ளார். ஜோத்பூர் நகரில் அமைந்துள்ள மிகவும் ஆடம்பரமான Umaid Bhawan அரண்மனையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
திருமணம் உள்ளிட்ட விசேட நிகழ்வுகளுக்கு இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சமீபத்திய தெரிவாக உள்ளது Umaid Bhawan அரண்மனை. இந்த அரண்மனையில் நீதா அம்பானியின் பிறந்தநாள் விழா இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது.
மொத்தம் 250 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். 32 தனியார் விமானங்கள் விருந்தினர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக் கான், ஆமிர் கான் தொடங்கி தொழிலதிபர்கள் மிட்டல், மகேந்திரா என நீண்ட பட்டியல்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி
அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த வீரர்களும் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாள் விழாவுக்கான மொத்த செலவு ரூ 220 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சிறப்பு ஒலி, ஒளி காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு என லண்டனில் இருந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |