சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு!
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலைன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) நிறுவனர் நீடா அம்பானி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீடா அம்பானி தேர்வு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் (Paris Olympics 2024) நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலைன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் நூறு சதவீதம் வாக்குகள் பெற்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இவர் பேசுகையில், "சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக மீண்டும் என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமை கொள்கிறேன்.
என்மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
கடந்த 2016 -ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் (Rio de Janeiro Olympic Games) போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக முதன்முதலாக நீடா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் ( International Olympic Committee) சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை நீடா அம்பானி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |