ரிலையன்ஸ் இயக்குனராக நீதா அம்பானி பெற்றுள்ள சம்பளம்... முழு தகவல்
பல ஆண்டுகளாக ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக செயல்பட்டு வந்த நீதா அம்பானி சமீபத்தில் தான் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.
மாதச் சம்பளம்
தமது மூன்று பிள்ளைகளையும் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற செய்யும் பொருட்டு நீதா அம்பானி விலகியதாக கூறுகின்றனர். ஆனால் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் விடயம் என்னவென்றால், ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்த நீதா அம்பானிக்கு மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை என்பது தான்.
ஆனால் சிறப்பு கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாளில் அவருக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர்கள் குழு கூட்டங்களில் கலந்துகொள்ள அவருக்கு சுமார் 6 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2022-2023 நிதியாண்டில் ரூ.2 கோடி கமிஷனாகவும் பெற்றுள்ளார். தற்போது அவர் ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக பொறுப்பில் இல்லாத நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து எந்த ஆதாயமும் பெற முடியாது.
தற்போது ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இணைந்துள்ள இஷா, ஆகாஸ் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகிய மூவருக்கும் மாத ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மாறாக, அவர்களுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாளில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவதுடன் ஆண்டுக்கு கமிஷனாக ஒரு தொகை பெற உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |