தெருக் கடையில் உணவு உண்ட நீதா அம்பானி - அதன் விலை எவ்வளவு தெரியுமா?
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற நீதா அம்பானி தெருக் கடையில் உணவை ருசித்துள்ளார்.
நீதா அம்பானி
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தனது ஆடம்பரமான வாழ்க்கையின் நடவடிக்கையின் காரணமாக எப்போழுதும் பிரபல்யமாகிக் கொண்டே இருப்பார்.
நீதா அம்பானிக்கு அரிய மற்றும் அதிக விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதில் அதிக ஆசை உண்டு.
அந்தவகையில் தற்போது அவருடைய இளைய மகனின் திருமணத்திற்கு முன்னாயத்தங்களை செய்துக் கொண்டு வருகிறார்.
அதற்காக திருமணத்திற்கு முன்னதாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு அழைப்பிதழ் வழங்க வாரணாசிக்கு விஜயம் செய்துள்ளார்.
இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்து, தசாஷ்வமேத் காட்டில் நடந்த கங்கா ஆரத்தி விழாவில் நீதா அம்பானி கலந்து கொண்டார்.
கோவில் நகரத்திற்கு தனது விஜயத்தின் போது, நிதா அம்பானி ஒரு பிரபலமான சாட் கடைக்கு சென்று, அங்குள்ள சில உள்ளூர் உணவுகளை ருசித்துள்ளார்.
தெருக்கடையில் உணவு உண்ட அம்பானி மனைவி
குஜராத்தி சமையலுக்குப் பெயர் பெற்ற இந்த உணவகம் மூன்று தலைமுறைகளாக அம்பானி குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது.
முகேஷ் அம்பானியின் விருப்பமான செவ் பூரி, பானி பூரி மற்றும் தாஹி படாடா பூரி போன்ற பாரம்பரிய உணவு வகைகளின் இந்த உணவகத்தின் மெனு உள்ளது.
#WATCH | Varanasi, Uttar Pradesh: Founder and Chairperson of Reliance Foundation Nita Ambani visits a chaat shop and interacts with locals pic.twitter.com/1QIY4Ha0xs
— ANI (@ANI) June 24, 2024
முகேஷ் அம்பானியின் விருப்பமான பாங்கி அவர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களில் ஒன்று, இதன் விலை தோராயமாக ரூ.230 ஆகும்.
அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்பட்டு வாழை இலையில் வேகவைக்கப்பட்ட இந்த தனித்துவமான உணவு, பல ஆண்டுகளாக பிரபல்யமடைந்து வருகிறது.
மேலும் இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |