தோல்வியுற்றபோதும் எதிரணி வீராங்கனையுடன் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்த நீடா அம்பானி! வைரலாகும் புகைப்படம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
சுருண்ட மும்பை இந்தியன்ஸ்
WPL தொடரின் நேற்றைய போட்டியில் RCB மற்றும் MI அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.
Relive the moment ? https://t.co/hgfM2VopcA pic.twitter.com/q5XHckJd4J
— Women's Premier League (WPL) (@wplt20) March 12, 2024
அதிகபட்சமாக சஜனா 30 (21) ஓட்டங்களும், ஹேலே மேத்யூஸ் 26 ஓட்டங்களும் எடுத்தனர். RCB அணியின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
The @RCBTweets bounce back with two big wickets in quick succession!#MI 69/3 after 10 overs with Amelia Kerr & Nat Sciver-Brunt in the middle ?
— Women's Premier League (WPL) (@wplt20) March 12, 2024
What total can they get from here? ?
Live ??https://t.co/Xs3l4Ayc31#TATAWPL | #MIvRCB pic.twitter.com/6CtJHSU7ho
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
நீடா அம்பானி
போட்டி முடிந்ததும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி RCB வீராங்கனை எல்லிஸ் பெர்ரியுடன் இணைந்து சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
Good Morning, #RCB & #EllysePerry Fans ? pic.twitter.com/Mpzy7mGwQX
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) March 13, 2024
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், 40 ஓட்டங்களும் எடுத்த எல்லிஸ் பெர்ரி பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
An All Round Performance ?@ellyseperry guides @RCBTweets to the playoffs with a 4️⃣ ?
— Women's Premier League (WPL) (@wplt20) March 12, 2024
Scorecard ??https://t.co/6mYcRQlhHH#TATAWPL | #MIvRCB pic.twitter.com/o4UDT87rQt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |