கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியுடன் திருமணத்திற்கு பின்னரும் வேலைக்கு சென்ற நீதா: அவர் வாங்கிய சம்பளம்
பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, பட்டப்படிப்புக்கு பின்னர் ஆரிசியராக வேலைக்கு சென்றுள்ளதுடன் அவர் அப்போது வாங்கிய மாத சம்பளம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பின்னரும்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருடனான திருமணத்திற்கு பின்னரும் நீதா அம்பானி, தமது ஆசிரியர் வேலையை கைவிடவில்லை என்றே கூறப்படுகிறது. Simi Garewal என்ற ஊடகவியலாளருடன் நீதா அம்பானியின் நேர்காணல் ஒன்றில், இது தொடர்பில் நீதா அம்பானி விரிவாக பகிர்ந்துகொண்டிருந்தார்.
1985ல் முகேஷ் அம்பானியை திருமணம் செய்துகொண்ட பின்னர், நீதா அம்பானி Sunflower நர்சரியில் ஆசிரியராக வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளார். வெறும் மூன்று வாரங்கள் பழகிய நிலையிலேயே, முகேஷ் - நீதா அம்பானி திருமணம் நடந்துள்ளது.
நீதா அம்பானி நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். திருமணத்திற்கு முன்னர் முகேஷ் அம்பானியிடம் முன்வைத்த ஒரே ஒரு நிபந்தனை குறித்து வெளிப்படுத்தியிருந்த நீதா அம்பானி, ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஒப்புக்கொண்ட முகேஷ் அம்பானி, திருமணத்திற்கு பின்னர் பல ஆண்டுகள் நீதா அம்பானியை வேலைக்கு அனுப்பினார். Sunflower நர்சரியில் ஆசிரியராக வேலை பார்த்த போது மாதம் ரூ 800 சம்பளமாக வாங்கியதாக நீதா அம்பானி குறிப்பிட்டிருந்தார்.
கல்விக்கு என பெரும் பங்களிப்பு
அப்போதும் பலர் தம்மை விமர்சித்ததாக கூறும் நீதா அம்பானி, ஆசிரியராக பணியாற்றிய அந்த காலகட்டம் தமக்கு மனநிறைவை அளித்ததாக குறிப்பிடிருந்தார். பலர் தம்மை ஏளனமாக பார்த்தார்கள், நகைத்தார்கள், ஆனால் அந்த வேலை எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் நீதா அம்பானி.
ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிடும் நிலை ஏற்பட்டாலும், அதன் பின்னர் கல்விக்கு என பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார் நீதா அம்பானி. ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் பாடசாலைகள் பல திறந்துள்ளார்.
தரமான கல்வியை சிறார்களுக்கு அளிப்பதே நோக்கமாக கொண்டுள்ளது ரிலையன்ஸ் பாடசாலைகள். ஜாம்நகர், சூரத், வதோதரா, தஹேஜ், லோதிவாலி, நாகோதனே, நாக்பூர் மற்றும் நவி மும்பை உட்பட பல நகரங்களில் செயல்பட்டு வருகிறது நீதா அம்பானியின் பாடசாலைகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |