டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு... பிரபல நிறுவனர் ஒருவர் மக்களுக்கு எச்சரிக்கை
டிஜிட்டல் தங்கம் இந்தியாவில் இதுவரை ஒழுங்குபடுத்தப்படாததால், அதை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு Zerodha தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிஜிட்டல் தங்கம்
டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் போதே 3 சதவீத GST மற்றும் தளக் கட்டணங்கள் உள்ளிட்ட பிற வரிகளில் 2-3 சதவீதம் என 6 சதவீதம் அளவுக்கு முதலீட்டாளர்கள் இழக்கின்றனர்.

சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, டிஜிட்டல் தங்கம் போன்ற ஒழுங்குபடுத்தப்படாத தயாரிப்புகளைத் தவிர்க்குமாறு முதலீட்டாளர்களை எச்சரிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்ட நிலையிலேயே நிதின் காமத்தின் எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.
காமத் தமது சமூக ஊடகத்தில் குறிப்பிடுகையில், டிஜிட்டல் தங்கம் ஒழுங்குபடுத்தப்படாதது. SEBI சரியான நேரத்தில் நினைவூட்டல் வெளியிட்டுள்ளது என்றார்.
டிஜிட்டல் தங்கத்தை யாரும் ஒழுங்குபடுத்துவதில்லை என்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை, மேலும் அதை விற்கும் தளங்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஏதாவது நடந்தால், நீங்கள் எங்கேயும் முறையிட முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

எளிதான மாற்றாக
மேலும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று காமத் பரிந்துரைத்தார்.
நவம்பர் 8ம் திகதி, சந்தை ஒழுங்குமுறை ஆணையம் முதலீட்டாளர்கள் டிஜிட்டல் அல்லது இ-கோல்டு தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்கு எதிராக எச்சரித்தது, அத்தகைய முதலீடுகள் அதன் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு வெளியே வருகின்றன மற்றும் குறிப்பிடத்தக்க அபாயங்களை உள்ளடக்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

சில ஒன்லைன் தளங்கள் 'டிஜிட்டல் தங்கம்' அல்லது 'இ-தங்கம்' தயாரிப்புகளை நிஜமான தங்கத்தில் முதலீடு செய்வதற்கு எளிதான மாற்றாக ஊக்குவித்து வருவதை SEBI கவனித்ததை அடுத்தே எச்சரிக்கை வெளியானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |