அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள்: கவனம் ஈர்த்துவரும் கேரளப் பெண்
Kerala-born Nithya Raman set to make history as Los Angeles' first Asian American mayor: கேரளாவில் பிறந்தவரான நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் சிலர் கவனம் ஈர்த்துவருகிறார்கள்.
அவர்களில், கேரளாவில் பிறந்த நித்யா ராமனும் (45) ஒருவர்.
கவனம் ஈர்த்துவரும் கேரளப் பெண்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயர் பதவிக்கு போட்டியிடும் நித்யா ராமன் வரலாறு படைக்க இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதற்குக் காரணம், நித்யா தேர்தலில் வெற்றி பெற்று மேயராவாரானால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் ஆசிய அமெரிக்க மேயர் என்னும் பெருமை அவருக்குக் கிடைக்கும்.
லாஸ் ஏஞ்சல்ஸின் தற்போதைய மேயரான கேரன் பாஸ் (Karen Bass, 73), ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.

அவரும் லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் பெண் மேயர், மற்றும் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்க மேயர் என்னும் பெருமைக்குரியவர்தான்.
விடயம் என்னவென்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் தேர்தலில் வாக்கெடுப்பு எண்ணிக்கை முழுமையாக முடிவடையவில்லை.
என்றாலும், நித்யாவுக்கு 52 சதவிகித வாக்குகளும் கேரனுக்கு 48 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் பிறந்தவரான நித்யா, தனது ஆறாவது வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, 22ஆவது வயதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
ஹார்வர்ட் பல்கலையில் பட்டமும், Massachusetts தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் நித்யா.
அத்துடன், நித்யா Transparent Chennai என்னும் ஆய்வமைப்பை நிறுவியவர், SELAH Neighborhood Homeless Coalition என்னும் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் Time's Up Entertainment என்னும் திரைத்துறை பெண்களுக்கு உதவும் அமைப்பின் எக்ஸிகியூட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.