வெளிநாட்டில் கைநிறைய சம்பளம்... மொத்தமாக விட்டுவிட்டு இந்தியாவில் டீ விற்று கோடிகள் சம்பாதிக்கும் நபர்
அமெரிக்காவின் ஹூஸ்டனில் பெருந்தொகை சம்பளத்தில் வேலை பார்த்த இருவர், மொத்தமாக வேலையை விட்டுவிட்டு, இந்தியாவில் டீ விற்று தற்போது கோடிகள் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.
Chaayos என டீ கடை
ஹூஸ்டனில் ஒன்றாக வேலை பார்த்த நண்பர்கள் இருவர், வேலையை விட்டுவிட்டு இந்தியாவின் டெல்லியில் Chaayos என டீ கடை ஒன்றை துவங்கினர். Nitin Saluja மற்றும் அவரது நண்பர் Raghav Verma ஆகியோர் 2012ல் துவங்கிய இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 2,077 கோடி என்றே கூறப்படுகிறது.
2012 நவம்பர் மாதம் குர்கான் பகுதியில் முதல் கடையை திறந்துள்ளனர். மட்டுமின்றி இவர்களின் Chaayos டீ கடைகளில் மொத்தம் 12,000 வகைகளில் டீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 25 வெவ்வேறு சுவைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் மிக குறுகிய காலத்திலேயே ஆண்டுக்கு ரூ 1 கோடி வருவாய் ஈட்டும் வகையில் Chaayos நிறுவனம் வளர்ந்துள்ளது. தற்போது இந்தியாவின் முக்கியமான நகரங்களில் 200க்கும் மேற்பட்ட Chaayos கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
சந்தை மதிப்பு ரூ 2077 கோடி
நாளுக்கு 100,000 டீ விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா நெருக்கடி நிலை ஏற்பட்ட போதும், Chaayos வருவாய் அதிகரித்ததாகவே கூறப்படுகிறது.
2022ல் Chaayos நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 135 கோடி என்றே கூறப்படுகிறது. Alpha Wave Ventures என்ற நிறுவனம் சுமார் 53 மில்லியன் டொலர் முதலீடு செய்துள்ள நிலையில், Chaayos நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 2077 கோடி என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |