நெருக்கடியில் முதல் சர்வதேச சதம் விளாசிய இந்திய வீரர்! கண்ணீர்விட்டு கடவுளுக்கு நன்றி கூறிய தந்தை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இந்திய அணி வீரர் நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசினார்.
ஜெய்ஸ்வால் 82
மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்கள் குவித்ததைத் தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
ரோஹித் ஷர்மா (3) சொதப்பிய நிலையில், கே.எல்.ராகுல் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 118 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் விளாசினார்.
"𝙈𝙖𝙞𝙣 𝙟𝙝𝙪𝙠𝙚𝙜𝙖 𝙣𝙖𝙝𝙞!" 🔥
— Star Sports (@StarSportsIndia) December 28, 2024
The shot, the celebration - everything was perfect as #NitishKumarReddy completed his maiden Test fifty! 👏#AUSvINDOnStar 👉 4th Test, Day 3 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/hupun4pq2N
விராட் கோஹ்லி 36 ஓட்டங்களும், பண்ட் 28 ஓட்டங்களும் எடுத்து வெளியேற. ஜடேஜா 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நிதிஷ் குமார் ரெட்டி சதம்
அப்போது நிதிஷ் குமார் ரெட்டி(Nitish Kumar Reddy), வாஷிங்டன் சுந்தர் கூட்டணி கைகோர்த்தது. இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பொறுமையின் சிகரமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அப்போது மொத்த மைதானமே ஆர்ப்பரித்தது.
The rising ⭐ of Indian cricket shines bright in the Boxing Day Test with a maiden Test hundred! 💪
— Star Sports (@StarSportsIndia) December 28, 2024
Take a bow, #NitishKumarReddy! 🔥#AUSvINDOnStar 👉 4th Test, Day 3 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/xsKac0iCju
மேலும் நிதிஷின் தந்தை ஆனந்த கண்ணீர் சிந்தி கடவுளுக்கு நன்றி கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |