பிரித்தானியாவில் சிரிப்பு வாயு தடை செய்யப்படலாம்: செயலாளர் மைக்கேல் கோவ் அறிவிப்பு
பிரித்தானியாவில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் திட்டங்களின் கீழ் சிரிப்பு வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு தடை செய்யப்பட உள்ளது.
நைட்ரஸ் ஆக்சைடு தடை
ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியில் சோபி ரிட்ஸ் உடனான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லெவலிங் அப் செயலாளர் மைக்கேல் கோவ், பிரித்தானியாவில் நைட்ரஸ் ஆக்சைடு தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.
சமூக விரோத நடத்தைகளை கட்டுப்படுத்தும் அரசின் திட்டங்களுக்கு கீழ், நைட்ரஸ் ஆக்சைடு எனப்படும் சிரிக்கும் வாயு 1971 ஆம் ஆண்டு போதைப்பொருள் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Is the government planning to ban laughing gas? - @SophyRidgeSky
— Sophy Ridge on Sunday & The Take (@RidgeOnSunday) March 26, 2023
Levelling up secretary @michaelgove confirms the government's plan to ban Nitrous oxide as a part of their "crack down" on anti-social behaviour#Ridge https://t.co/WSPQacUvD9
? Sky 501 and YouTube pic.twitter.com/hQyEblcBEp
ஆனால் இந்த நைட்ரஸ் ஆக்சைடு எந்த வகையைச் சார்ந்த போதைப் பொருள் என்பது குறித்தும், பொதுமக்கள் அதனுடன் பிடிப்பட்டால் எந்த வகையான கிரிமினல் குற்றங்களை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் தகவல் வெளியிடவில்லை.
அதே சமயம் இந்த வகையான போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் குற்றவாளிகாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்றும், ஆனால் அவற்றை வைத்து இருப்பது சட்டவிரோதமானது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
The sun
மைக்கேல் கோவ் கருத்து
இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் கோவ் (Levelling up secretary Michael Gove) தெரிவித்த தகவலில், பிரித்தானியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் பூங்காக்களில் நடக்கும் எவரும் இந்த சிறிய வெள்ளி குப்பிகளை பார்த்து இருப்பார்கள், இவை போதைப்பொருள் உட்கொள்வதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
இவை நரம்பியல் மற்றும் உளவியல் பாதிப்புகளை உட்கொள்பவர்களிடம் ஏற்படுத்துகிறது, சுமார் அரை மில்லியன் மக்கள் இந்த மருந்துகளை உட்கொள்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக கோவ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவில் கஞ்சாவுக்குப் பிறகு 16 முதல் 24 வயதுடையவர்களிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது போதைப் பொருளாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
Twitter
மேலும் இது தொடர்பான நடவடிக்கையில் பிரதமர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோர் கடுமையாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
5 பேர் உயிரிழப்பு
இந்த நைட்ரஸ் ஆக்சைடு காரணமாக 2017 ல் சுமார் ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த நைட்ரஸ் ஆக்சைடு மத்திய நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி, பக்கவாதத்தை ஏற்படுத்தும் மற்றும் சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தும்.
ரிஷி சுனக் கருத்து
மக்கள் நீண்ட காலமாக தங்கள் சுற்றுப்புறங்களில் சமூக விரோத நடவடிக்கைகளை சகித்து கொண்டு வருகிறார்கள்.
இவை சிறிய குற்றங்கள் இல்லை, மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கிறது என காட்டமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Twitter