வெளிநாட்டவர்களுக்கு மீண்டும் NO: சுவிஸ் நாட்டவர்களின் முடிவு
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை என்பது நீண்ட காலமாகவே ஒரு முக்கிய பேசுபொருளாக காணப்பட்டுவருகிறது.
வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாமா என்னும் கேள்விக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும், சுவிஸ் மக்கள் ஒவ்வொரு விதமாக பதிலளித்துவருகிறார்கள்.
அதுவும், அவர்களுடைய முடிவு மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசமாகவே காணப்படுவதை கவனிக்க முடிகிறது.
வெளிநாட்டவர்களுக்கு மீண்டும் NO
இந்நிலையில், வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை, வெளிநாட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுதல் போன்ற பல்வேறு விடயங்களை முடிவு செய்ய நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில், சுவிஸ் மக்கள் மீண்டும் வெளிநாட்டவர்களுக்கு NO சொல்லியிருக்கிறார்கள்.
வாக்காளர்களில் 61 சதவிகிதம்பேர், வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
சுவிஸ் மக்களைப் பொருத்தவரை, தங்கள் சமுதாயத்தில், அதாவது வெளிநாட்டவர்களுடன் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் சுவிஸ் சமுதாயத்தில், தங்கள் நாடு எப்படி நிர்வகிக்கப்படவேண்டும் என்பது குறித்து வெளிநாட்டவர்கள் கருத்துக்கள் தெரிவிப்பதைக் குறித்து சுவிஸ் நாட்டவர்கள் பயப்படுகிறார்கள்.
ஆக, தங்கள் நாட்டைக் குறித்து முடிவுகள் எடுக்கும் விடயங்களில் வெளிநாட்டவர்களும் பங்கு வகித்துவிடுவார்களோ என சுவிஸ் நாட்டவர்களுக்கு பயம் இருக்கும் வரை, எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என ஊடகவியலாளரான Clare O'Dea என்பவர் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |