இப்படி அந்த நோ பால பார்க்காமா விட்டுட்டாங்களே! பஞ்சாப் ஜெயிச்சுருக்குமே? வைரலாகும் வீடியோ
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில், முஸ்தபிசுர் ரஹீம் நோ பால் வீசிவிட்டதாக கூறி அவரின் வீடியோவை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது.
I’ve seen this many times over now. I still can’t say with certainty that at the point of first contact, Fizz’s foot isn’t touching the return crease. Brings forth 2 points
— Aakash Chopra (@cricketaakash) September 22, 2021
1. Was it checked enough times by the 3rd umpire to remove doubt? Happened on two consecutive balls. 1/2 https://t.co/Mr587WwrkV
அதன் பின் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு அருகில் வந்த பஞ்சாப் அணி நூலிழையில் வெற்றியை நழுவ விட்டதால், பஞ்சாப் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.
#RRvsPBKS no ball controversy.@cricketaakash @CricCrazyJohns@IrfanPathan
— ℬℴ?? ℬ????? (@4mBAD) September 22, 2021
Over:- 19.1 (speed ×.5)
Look at the toe and the heel at 1st point of contact. pic.twitter.com/ZLQ2KyoUGc
இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஆட்டத்தின் 19.1 பந்தினை வீசிய முஸ்தபிசுர் ரஹீம், இரண்டாம் கிரிஸிற்கு வெளியே சென்றுவிட்டதாக கூறி குறிப்பிட்டு, அதே போன்று 19.2-வது பந்தினையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர்.
Screenshot at the point of 1st touch of 19.2 over pic.twitter.com/mFyToxNAdw
— ℬℴ?? ℬ????? (@4mBAD) September 22, 2021
அதுமட்டுமின்றி எம்.சி.சிவிதியிலும் இதில் திருபதி இல்லை என்றால், நடுவர் நோ பால் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் ரசிகர்கள் இது நோ பாலாக கொடுக்கப்பட்டிருந்தால், போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்று குமுறி வருகின்றனர்.
What the MCC rules of no ball say pic.twitter.com/5sWrqdbdWp
— ℬℴ?? ℬ????? (@4mBAD) September 22, 2021