தோனிக்காக காத்திருப்போம்...! சென்னை சூப்பர் கிங்ஸ் CEO திட்டவட்டம்
தோனி இந்தியா திரும்பிய பின் தான் சென்னை அணி கொண்டாட்டத்தில் ஈடுபடும் என அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த 2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை அணி பெரியளவில் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
இதுகுறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் கூறியதாவது, கேப்டன் இல்லாமல் எந்தவித கொண்டாட்டமும் இருக்காது.
கேப்டன் தோனி இந்தியா திரும்பும் வரை நாங்கள் காத்திருப்போம். நாங்கள் சந்தோசமாக காத்திருப்போம், தோனி இல்லாமல் எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடமாட்டோம்.
We are the Chennai boys… Making all the noise… Everywhere we Gooo…??
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) October 15, 2021
For all of you #SuperFans.! ??#WhistlePodu #Yellove #SuperCham21ons ?? pic.twitter.com/6nQS9zWovf
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகர் பணியை தோனி முடித்த பிறகு தான் கொண்டாட்டம்.
அவர் ஏற்கனவே சென்னை கேப்டனிலிருந்து இந்திய அணி ஆலோசகராக மாறிவிட்டார்.
எனவே, டி20 உலகக் கோப்பை பிறகு தோனி இந்தியா திரும்பிய பின் நாங்கள் ஒன்று கூடுவோம் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.