அடுத்த தேர்தலுக்குப்பின் ரிஷி பிரதமராக இருக்க வாய்ப்பே இல்லை: கட்டியங்கூறும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கிவிட்ட நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துவருகிறது.
உள்ளாட்சித் தேர்தல்களின் முக்கியத்துவம்
உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை அவை அடுத்து வரும் பொதுத்தேர்தலில் நிழலாட்டமாகவே பார்க்கப்படுகின்றன.
இங்கிலாந்திலுள்ள 230 கவுன்சில்களில் 8,000க்கும் அதிகமான கவுன்சிலர்கள், மற்றும் நான்கு மேயர்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியாகத் துவங்கியுள்ளன.
Source: Sky News
அடுத்த தேர்தலுக்குப்பின் ரிஷி பிரதமராக இருக்க வாய்ப்பே இல்லை
இந்நிலையில், வெளியாகிவரும் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த தேர்தலுக்குப்பின் ரிஷி பிரதமராக இருக்க கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை எனலாம் என்று கூறியுள்ளார் ஊடகவியலாளரான Sam Coates என்பவர்.
காரணம் என்னவென்றால், கன்சர்வேட்டிவ் கட்சி பல இருக்கைகளை இழந்துவருகிறது. லேபர் கட்சி முன்னேறி வருகிறது. லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியும் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
Source: Sky News
ஆக, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் ஊழல்கள், மிக மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றிற்காக மக்கள் அவர்களைத் தண்டிப்பதால்தான் அவர்கள் தங்கள் இருக்கைகளை இழந்துவருவதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.