'வாய்ப்பே இல்லை, இதுதான் எங்கள் முடிவு' பிரித்தானிய அரசு அதிரடி!
தடுப்பூசிகளை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்வது குறித்து பிரித்தானிய அரசு அதன் திட்டவட்டமான முடிவை அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் குறைந்தது முதல் டோஸை வழங்காதவரை, கோவிட் -19 தடுப்பூசிகளை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் Jamie Davies தெறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எங்கள் முதல் முன்னுரிமை பிரித்தானிய பொதுமக்களைப் பாதுகாப்பதாகும். அந்த இலக்கை அடையும்வரை எங்கள் தடுப்பூசி விநியோகம் தொடரும்.
எங்களிடம் தற்போது தடுப்பூசிகளின் உபரி இல்லை, ஆனால் அவை கிடைக்கும்போது அவை எவ்வாறு சிறந்த முறையில் பற்ற நாடுகளுக்கு வழங்குவதை கருத்தில் கொள்வோம்" என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 15-ஆம் திகதிக்குள் இங்கிலாந்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் வழங்கப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் திட்டம் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், நாட்டின் 66.7 மில்லியன் மக்கள்தொகையில் 52.7 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவருக்கும் ஜூலை இறுதிக்குள் முதல் டோஸ் வழங்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரித்த்னையாவில் இதுவரை 30 மில்லியனுக்கு அதிகமானோருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
